நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்
சென்னை: தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது நஸ்ருதீன், கடந்த ஜூலை 28- ஆம் தேதி தெரு நாய் கடித்ததன் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உரிய இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் செப். 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.