பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.
தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திடத்தின் கீழ், அந்தக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க வழிவகை செய்யும்.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.
இதையும் படிக்க: 'புரிய வேண்டியவர்களுக்கு புரியும்' - செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.