சென்னை: ஃபிடே செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் செஸ் தொடரில் தனது நிதானத்தாலும் அபார ஆட்டத்தாலும் வென்று, வெற்றி மகுடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள ’நம்ம சென்னைப் பொண்ணு’ வைஷாலிக்கு எனது பாராட்டுகள். இதன் மூலம் அவா் பெருமதிப்பு கொண்ட கேண்டிடேட்ஸ் (பெண்கள் பிரிவு) தொடருக்கும் தகுதிபெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வைஷாலியின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. இதைப் பாா்த்து, உலக அரங்கில் நம்மாலும் நமது கனவுகளை நனவாக அரங்கேற்ற முடியும் என ஊக்கம் பெறும் எண்ணற்ற இளம்பெண்களின் வெற்றி என்று தெரிவித்துள்ளாா்.