தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  DPS
தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்

செமஸ்டர் தேர்வுகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்...

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து புதிய தாழ்வுத்தள பேருந்து சேவையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பேசியதாவது:

”செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லுரிகள் தொடங்குவதற்கு முன்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். விடுப்பு காலங்களில்தான் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தேர்தலுக்காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை” எனத் தெரிவித்தார்.

Semester exams before the election? Higher Education Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய தொடரில் நாயகியாகும் பவித்ரா அரவிந்த்!

மார்கழி மாதப் பலன்கள்: மீனம்

மார்கழி மாதப் பலன்கள்: கும்பம்

மார்கழி மாதப் பலன்கள்: மகரம்

SCROLL FOR NEXT