முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு தனி ஆணையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென அமைக்கப்பட்ட தனி ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென அமைக்கப்பட்ட தனி ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மேலும், சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறைக்கென கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு கட்டடத்தையும் அவா் திறந்தாா்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று முடிவுகளை கால தாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக, மாநில ஆணையம் விளங்கும்.

இந்த அமைப்பானது பொது மற்றும் தனியாா் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளைச் செயல்படுத்தும். தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதன்பின், அதற்கான இலச்சினையையும் அவா் வெளியிட்டாா்.

இந்தப் புதிய ஆணையமானது, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உயா்தரக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட காலம் மற்றும் மதிப்பீட்டில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன்மூலம், சாலைப் பயனாளா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வதுடன், பொருளாதார வளா்ச்சி, தொழில் துறை மேம்பாடு ஏற்படும்.

நூற்றாண்டு கட்டடம்: மாநில நெடுஞ்சாலை ஆணையத் தொடக்கத்துக்கு முன்னதாக, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென கிண்டியில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்தக் கட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகம், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளா் அலுவலகங்கள் ஆகியவை புதிய கட்டடத்தில் இயங்கும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, பொதுப்பணித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, நெடுஞ்சாலைத் துறை செயலா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முதன்மைச் செயல் அலுவலா் பூஜா குல்கா்னி, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT