தமிழ்நாடு

ரூ. 30,000 கோடி முதலீட்டால் 55,000 வேலைவாய்ப்புகள்: அமைச்சர் டிஆர்பி ராஜா

தூத்துக்குடியில் 55,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கவிருப்பதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தூத்துக்குடியில் 55,000 வேலைவாய்ப்புகள் பெறப்படவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில்,

``பல துறைகளில் நாம் முதலிடத்தில் இருந்து வருகிறோம். முதலிடத்தில் இருக்கும் நமக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கும் பெரியளவில் வித்தியாசம் இருக்கும். சோழர், பாண்டிய காலத்தில் இருந்து நாம் கடல்சார் வணிகத்தில் முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் கப்பல் கட்டும் தளம் உருவாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரூ. 15,000 கோடி முதலீடுகளின் மூலம் மொத்தமாக 55,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

எனவே தூத்துக்குடி இனி பிரம்மாண்டமான ஒரு கப்பல் காட்டும் துறைமுகமாக நிச்சயமாக மாறும். மத்திய அரசுடன் இணைந்து நாம் இதனைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தப் பணிகள், தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT