நாகையில் விஜய் 
தமிழ்நாடு

மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து... பேசத் தொடங்கினார் விஜய்!

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை: நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு கடல் தாய் மனதில் இருக்கும், எனது மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.

நாகையில் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதித்த நேரம் முடிந்துவிட்ட நிலையில், அண்ணா சிலை பகுதியை விஜய் வாகனம் 1.30 மணியளவில்தான் வந்ததடைந்தது.

பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை அடைந்ததும், விஜய் பேசத் தொடங்கினார். தொண்டர்களின் ஆரவாரத்துடன் விஜய் பேசி வருகிறார்.

காலை முதலே இந்த இடத்தில் ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். மின் கம்பங்களின் மீது தொண்டர்கள் ஏறுவார்கள் என்பதால், தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் விஜய் பிரசாரம் நடக்கும் பகுதியில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, அந்தக் கட்சி சாா்பில் தொண்டா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி தவெக தொண்டர்கள் மரங்களின் மீதும் கம்பங்களின் மீதும் நின்றிருந்தனர். அவர்களை பத்திரமாக கீழே இறங்குமாறு நிர்வாகிகளும் அறிவுறுத்தினர்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து திருவாரூர் வரை காரில் வந்து, திருவாரூரிலிருந்து பிரசார வாகனத்தில் நாகை வந்தடைந்தார். அவருடன் ஏராளமான தொண்டர்களும் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வருகையால் நாகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த செப். 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கினாா். தொடா்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அதன்படி, இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், மரங்கள், மின்கம்பங்கள், கொடிக்கம்பங்கள், சாலைத் தடுப்புகளில் ஏறக் கூடாது என்று தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டும்கூட, அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை.

TVK leader Vijay is scheduled to campaign in Nagapattinam today. Vijay is scheduled to address the Cauvery Kadayamadai area shortly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT