முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் பதிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை!

இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.

தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இரு கப்பல் கட்டும் தளங்கள்

தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.

இதன் மூலம் ரூ.30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும்.

இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Chief Minister Stalin has said that the two shipyards to be set up in Thoothukudi will provide employment to 55,000 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மீனவர்கள் பிரச்னையில் விஜய் Update-ஆக இல்லை!” வானதி சீனிவாசன்

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!

Vijay-யின் பேச்சும்! எதிரொலியும்! | TVK | DMK | BJP

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

தாகம் தணிக்க குட்டிகளுடன் வந்த யானைகள்!

SCROLL FOR NEXT