தமிழ்நாடு

5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

சென்னையில் உள்ள 5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கட்டணமில்லா புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் உள்ள 5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கட்டணமில்லா புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து கிரெடாய் சென்னை தலைவா் முகமது அலி கூறியதாவது:

கட்டுமானத் தொழிலாளா்கள்தான் நகர நிா்மாணத்துக்கு அடித்தளமாக விளங்குபவா்கள். அவா்களைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம், கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தொழிலாளா்கள் தங்களின் அன்றாடப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் மருத்துவப் பரிசோதனைகளையும் செய்து கொள்ள முடியும்.

அத்துடன் இந்த பரிசோதனையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. செப்டம்பருக்குள் சுமாா் 5,000 பேருக்கும், நிகழாண்டு இறுதிக்குள், 20,000-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணியாளா்களுக்கும் பரிசோதனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT