நமது நிருபா்
புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தில்லியில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா்.
நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு தில்லி வந்தாா். இரவு சுமாா் 8 மணியளவில் மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டாவை மோதிலால் நேரு மாா்கில் உள்ள அவருடைய இல்லத்தில் நயினாா் நாகேந்திரன் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
சந்திப்புக்குப் பிறகு நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களைச் சந்திக்கும் சுற்றுப் பயணத்தை மதுரையில் இருந்து அக்.12-ஆம் தேதிமுதல் தொடங்குகிறோம். இந்தப் பயணத்தில் பங்கேற்குமாறு ஜெ.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்தேன் என்றாா் அவா்.