முகப்பு
தமிழ்நாடு

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் தொடங்கப்படுவது குறித்து...

Updated On : 23 செப்டம்பர் 2025, 10:30 am IST
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித் தடங்களில் செயல்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் (3, 4, 5 வழித்தடங்கள்) ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இதில், 5-ஆவது வழித்தடமானது மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தூரத்திற்கு 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயர்நிலை ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே இடையேயான 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஆளில்லா முதல் மெட்ரோ ரயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூன் 2026-ல் போரூர்- கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையேயான ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro Rail administration officials have informed that the Madhavaram-Sholinganallur metro rail service will be launched in March 2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments