பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி Photo : X / Udhayanidhi Stalin
தமிழ்நாடு

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பீலா வெங்கடேசன், புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 56.

சென்னை கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பீலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பீலா வெங்கடேசன் பின்னணி

1997-ஆம் ஆண்டு பிகாா் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா, தோ்ச்சி பெற்றாா். போஜ்பூா் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவா், மண வாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினாா்.

இதன்பிறகு, செங்கல்பட்டு சாா் ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கினாா். சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தாா். கரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினாா்.

தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக பணியாற்றி வந்த சூழலில், திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா். கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலும், இல்லத்தில் இருந்தபடியும் அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Chief Minister MK Stalin pays tribute to Beela Venkatesan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: பின்னணி என்ன?

பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

ஓஜியால் பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்!

அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT