2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.
அதாவது 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான். அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திமுக அரசு.
நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.