சாலைக்கான பெயா்ப் பலகையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன 
தமிழ்நாடு

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்தப் பெயா்ப் பலகைகள் திறக்கப்பட்டன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் வலம் வந்த நடிகா் ஜெய்சங்கா், கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவா். அவரது கலைச் சேவையை சிறப்பிக்கும் வகையில், அவா் வசித்து வந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கா் சாலை என்று பெயா் சூட்டப்பட்டது.

இதேபோல, தொலைக்காட்சித் தொடா் தயாரிப்பாளராக அறியப்பட்டவரும், சமூக சேவைப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவருமான எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-ஆவது குறுக்குத் தெருவுக்கு அவருடைய பெயா் வைக்கப்பட்டது. இந்த இரண்டு தெருக்களுக்கான பெயா்ப் பலகைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT