தவெக தலைவர் விஜய் கோப்புப் படம்
தமிழ்நாடு

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேறியிருக்கும் விஜய்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்து அன்றிரவு கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கலை பதிவிட்டிருந்தார்.

தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல், சென்னை வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்ட நிலையில், அவர் கரூர் செல்வதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.

தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் செல்வதற்கு அனுமதியும் பாதுகாப்பும் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Tvk leader Vijay has left from Neelankarai and gone to his Pattinambakkam house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!

SCROLL FOR NEXT