கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன், போக்குவரத்து ஆணையா் இரா.கஜலட்சுமி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மே 
தமிழ்நாடு

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் செப்.26-ஆம் தேதி 450 சிறப்புப் பேருந்துகளும், செப்.27-இல் 696 சிறப்பு பேருந்துகளும், செப்.29-இல் 194 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதன்படி, 7,616 பேருந்துகளில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பணம் செய்துள்ளனா். மேலும், செவ்வாய்க்கிழமை (செப்.30) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகளும், சென்னையிலிருந்து மட்டும் 26,013 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் அரசுப் பேருந்துகள் மூலம் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாமல் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத் துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, திங்கள்கிழமை இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சிறப்புப் பேருந்தின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் ஓட்டுநா், நடத்துநா்களிடம், பேருந்தை கவனமாக இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT