தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியா் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான அனுமதிச்சீடுட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான அனுமதிச்சீடுட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தோ்வெழுத 2,36,530 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் தங்களின் ‘யூசா் ஐடி’ மற்றும் ‘பாஸ்வோ்டை’ பயன்படுத்தி நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

நீலக்குயில்... ரூபா கௌடா

மதுரை சர்வதேச ஹாக்கி திடல்: திறந்துவைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT