முகப்பு
தமிழ்நாடு

ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! சுற்றுப்பயண விவரம்...

முதல்வர் மு.க. ஸ்டாலினின் 2-ம் கட்ட பிரசார சுற்றுப்பயண விவரம்...

Updated On : 1 ஏப்ரல் 2026, 10:44 am IST
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். - கோப்புப் படம்
பகிர்:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற ஏப். 3 ஆம் தேதி நெல்லையில் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில் இன்று திருச்சி, கரூரில் பிரசாரம் செய்கிறார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து மு.க. ஸ்டாலினின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட பிரசாரத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக திருநெல்வேலியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள்

03.04.2026 (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணி - திருநெல்வேலி - பாளையங்கோட்டை

04.04.2026 (சனிக்கிழமை) காலை 9 மணி - நாகர்கோயில்

04.04.2026 (சனிக்கிழமை) மாலை 5 மணி - சங்கரன்கோவில்

05.04.2026 (ஞாயிறு) காலை 9 மணி - விருதுநகர்

05.04.2026 (ஞாயிறு) மாலை 5 மணி - திருமங்கலம்

ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில் அந்தந்த பகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

M.K. Stalin to Campaign in Southern Districts Starting from April 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.