முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:36 am IST
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப். 5, 6) ஆகிய இரு நாள்களில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும், விருதுநகா், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

வெப்ப நிலை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 7 -ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.