முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு

Updated On : 17 ஏப்ரல் 2026, 5:37 pm IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் - விடியோ க்ளிப்
பகிர்:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும். இதன் தோல்வியை சோனியா காந்தி, மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகியோர் உறுதி செய்வர்.

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்தால், மசோதாவை நிறைவேற்ற முடியாது.

Advertisement

Advertisement

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, சிபிஐ உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், நாடாளுமன்றத்தில் மசோதாவை எதிர்த்தன. தற்போது, மசோதாவை 180 உறுப்பினர்கள்எதிர்க்கின்றனர். இந்த எண்ணிக்கை, மேலும் 190 வாக்குகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பாதிக்கும். சிறந்த ஆட்சி வழங்கப்படும்போதிலும், இத்தகைய அணுகுமுறையால் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தி, கூட்டாட்சி முறையின் உணர்வைக் குலைக்கக் கூடும்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல; அது நீதி, பங்களிப்பு, சமநிலையைப் பற்றியது.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின்கீழ் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படுவது நியாயமற்றது" என்றும் தெரிவித்தார்.

summary

Delimitation bill will be defeated in Parliament: Congress leader Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.