முகப்பு
இந்தியா

மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்

அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிக்கப்பட்டதாக ராகுல் பேச்சு

Updated On : 17 ஏப்ரல், 2026 at 8:35 PM
மக்களவை வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி - விடியோ க்ளிப்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 8:23 PM

இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் மசோதா தோற்கடிக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததையடுத்து, செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில், "நான் சொன்னதுபோல, இந்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல். எனவே, அது தோற்கடிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இது மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அல்ல, இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி.

Advertisement

Updated On : 17 ஏப்ரல், 2026 at 8:29 PM

2023 மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அரசு செயல்படுத்த முடிந்தால், அதனை எதிர்க்கட்சிகளில் 100 சதவிகிதத்தினர் ஆதரிப்பர். ஆனால், இது மகளிரின் மசோதா அல்ல.

இது இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பை மாற்றுவதற்கான முயற்சி என்று நாங்கள் தெளிவாகக் கூறினோம்" என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான சிறப்புக் கூட்டத்தொடரில், மொத்தமுள்ள 535 உறுப்பினர்களில் 489 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக 298 பேரும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.

இதனுடன் கொண்டுவரப்படவிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை.

summary

Constituency Delimitation Bill Defeated! Attack on the Constitution was defeated: Congress MP Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.