முகப்பு
தமிழ்நாடு

வில்லிவாக்கத்தில் விஜய் சாலை வலம்! ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரிப்பு!

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தது பற்றி...

Updated On : 20 ஏப்ரல் 2026, 4:32 pm IST
வில்லிவாக்கத்தில் விஜய் சாலை வலம்... - X
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

வண்டலூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து இன்று மாலை கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திறந்த வேனில் சென்றபடி வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் வேனில் இறங்கி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் கடைசி நாளான நாளை(ஏப். 21) விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார்.

summary

TVK Vijay campaign in Villivakkam! Canvassing for Adhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.