FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரம்...

சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் - dmk
பகிர்:

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சாலைவலம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisement

Advertisement

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் திமுகவின் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டுப் பேசினார்.

"தேர்தல் வாக்குறுதிகள் ஏறக்குறைய 90% நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகள் மத்திய அரசு உரிய அனுமதி வழங்காததால் தடைபட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகைபோலவே ரூ. 8,000 கூப்பன் திட்டம், திமுக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும். பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.

கடந்த முறை 'ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, அவர் முதல்வராக வர முடியாது' என்று கூறினார். ஆனால் கட்டத்தை உடைத்து ஆட்சிக்கு வந்துவிட்டோம். இப்போது தொடர்ந்து 2-ம் முறையாக திமுக ஆட்சிக்கு வராது என்றுகூறுகிறார்கள்.

வரும் தேர்தலில் திமுக தொடர்ந்து 2 ஆம் முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். இப்போது 2-ம் முறையாக ஆட்சியமைக்க முடியாது என்று கூறுவதை உடைத்து மீண்டும் திமுக ஆட்சியை அமைப்போம்.

நான் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வராக பொறுப்பேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்" என்று கூறினார்.

summary

Chief Minister Stalin Campaigns Intensively in Villivakkam, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments