முகப்பு
தமிழ்நாடு

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தை திருடியவர்கள் என விஜய் சூசகமாகப் பேசியுள்ளார்.

Updated On : 21 ஏப்ரல் 2026, 4:45 pm IST
தவெக தலைவர் விஜய் - ANI
பகிர்:

சென்னை: சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்று பயந்து, எடப்பாடி தொகுதியில் விசில் சின்னத்தை திருடியவர்களுக்கு என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தாக்கிப் பேசினார் தவெக தலைவர் விஜய்.

தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக தொண்டர்கள் மத்தியில் தலைவர் விஜய் உரையாற்றினார்.

இதுவரை திமுகவை மற்றும் தாக்கிப் பேசி வந்த தவெக தலைவர் விஜய், தன்னுடைய பிரசாரத்தின் நிறைவுக் கூட்டத்தில் அதிமுகவையும் தாக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

அவர் பேசுகையில், 10 தடவைக்கும் மேல் தேர்தலில் தோல்வியடைந்தும், இன்னும் திருந்தாத ஒருவர் இருக்கிறார்கள். அனுபவ சாலி அவர்களே, சேலத்தில் உள்ள ஒரு சிறிய தொகுதியிலேயே பதுங்கிக் கொள்ளாமல் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? ஜெயிப்பது என்ன நிற்க முடியுமா? அதை செய்துவிட்டு விஜய் பற்றி பேசுங்கள்.

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நம்ம சின்னத்தையே திருடியவர்கள். இதனால், நம்ம இயக்கத்துடன் இணைந்து வந்துகொண்டிருந்த சுயேச்சையாகப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கிறோம். எடப்பாடி தொகுதி மக்களே.. சுயேச்சை வேட்பாளரின் டிவி சின்னத்துக்கு ஓட்டுப் போடுவது விசில் சின்னத்தில் ஓட்டுப்போடுவது போல என்று கூறினார்.

summary

Those who stole the whistle symbol thought they would lose in their own constituency Vijay speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.