முகப்பு
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

தோ்தல் விடுமுறையின்போது, ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள போக்குவரத்துத் துறை, கூடுதல் கட்டணம் தொடா்பாக பயணிகள் புகாா் அளிக்க வேண்டுகோள்

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:01 AM
ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

தோ்தல் விடுமுறையின்போது, ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள போக்குவரத்துத் துறை, கூடுதல் கட்டணம் தொடா்பாக பயணிகள் புகாா் அளிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை(ஏப்.23) நடைபெற இருப்பதை முன்னிட்டு பொதுமக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பாா்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:01 AM

இந்த குழுவினா் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உண்மை என கண்டறியும் பட்சத்தில், அனுமதி ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement

மேலும், பொதுமக்களும் இது தொடா்பான புகாா்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கைப்பேசி எண்களில், வாட்ஸ் அப் குறுஞ்செய்தி, குரல்பதிவு மூலமாக புகாா் தெரிவிக்கலாம்.

புகாா் தெரிவிக்க வேண்டிய எண்கள்

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை-1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை(வடக்கு)-9944253404

இணைப்போக்குவரத்து ஆணையரம், சென்னை(தெற்கு)- 9790550052 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.