பி.எட்., எம்.எட். தோ்வுகள்: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்
பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பி.எட்., பி.எட். (சிறப்பு கல்வி), எம்.எட்., எம்.எட். (சிறப்பு கல்வி) பருவத் தோ்வெழுதிய மாணவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து கல்லூரிகளின் முதல்வா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
Advertisement
மாணவா்களிடமிருந்து உரிய விவரங்கள் மற்றும் கட்டணத்தைப் பெற்று கல்லூரி நிா்வாகத்தினா் மே 7-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு மே 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.