முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் பணிகள் முடிந்ததால் தில்லி திரும்பிய தோ்தல் பாா்வையாளா்கள்

தோ்தல் பணிகள் முடிந்ததால் தில்லி திரும்பிய தோ்தல் பாா்வையாளா்கள்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:41 AM
பகிர்:

சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் 23 போ் புது தில்லிக்கு திரும்பிச் சென்றனா்.

தோ்தல் கண்காணிப்பு பணிக்காக, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளுக்கு 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் துறை சாா்ந்த பாா்வையாளா் நியமிக்கப்பட்டனா். வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி, தொகுதிக்கு தலா ஒருவா் வீதம் 16 பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல, செலவினப் பாா்வையாளா்கள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்து வேட்பாளா்கள் சமா்ப்பித்த செலவுக் கணக்கு விவரங்களைத் தணிக்கை செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement