முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை...

Updated On : 29 ஏப்ரல் 2026, 12:57 pm IST
தலைமைச் செயலர் சாய் குமார் - DIPR
பகிர்:

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் சாய் குமார் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 85.15% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து மே 4 அன்று தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மே 4 அன்று 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வரும் இந்த கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர், சென்னை, தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Tamil Nadu may 4 Vote Counting: Chief Secretary Consultating with officials

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.