உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?
உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை நாள்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை (மே 1-ஆம் தேதி) முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைவேளையில் அவசர வழக்குகள் விசாரிக்க வேண்டி வந்தால் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழக்குகள் அவசரமானவை என்பதற்கான விண்ணப்பத்துடன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு முன்பாக நீதிமன்றத்தில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
விண்ணப்பங்களை நீதிபதிகளின் வீடுகளில் அளிக்கக் கூடாது.
வழக்கு விசாரணை மே 4, 5, 11, 12, 18, 19, 25, 26, ஜூன் 1,2 ஆகிய நாள்களில் காலை 10.30 மணி முதல் 4.45 மணி வரை நடைபெறும்.
நீதிபதிகள் வி. தனபாலன், ஏ. ஆறுமுகசாமி, சி.எஸ். கர்ணன், எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி, ஜி.எம். அக்பர் அலி, வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் அவர்களுக்கென உள்ள சில குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள்.
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கான கோடை விடுமுறை பற்றிய அறிவிப்பு அந்த நீதிமன்றத்தின் பதிவாளர் (நிர்வாகம்) சார்பில் தனியாக வெளியிடப்படும்.
High Court Closed from Tomorrow What to Do in Urgent Cases
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.