மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.4) கடைசி நாளாகும்.
இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2026-2027) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜன.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பிப்.7 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்.9 முதல் 11 வரை வாய்ப்பு வழங்கப்படும். இதில், ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது ஸ்ரீன்ங்ற்-ன்ஞ்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.