தமிழ்நாடு

ஏப்ரலில் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தோ்வு ஜன. 21 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தோ்வை சுமாா் 12 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப். 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப். 1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆா்வமுள்ள மாணவா்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்டத் தோ்வை எழுதிய மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.

தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னா் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தோ்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவா்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தங்கம் விலை உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 குறைவு!

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

SCROLL FOR NEXT