மழை EPS
தமிழ்நாடு

தென்மாவட்டங்கள், டெல்டாவில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் புதன், வியாழக்கிழமை (பிப்.4, 5) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் புதன், வியாழக்கிழமை (பிப்.4, 5) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன், வியாழக்கிழமை (பிப்.4, 5) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வட வானிலையே நிலவக்கூடும்.

குறிப்பாக, புதன்கிழமை (பிப்.4) நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிப்பொழிவு இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 69 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை

கரூா் நெரிசல் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அமெரிக்க வரி குறைப்பு நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும்!

சோழா் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் பிப். 13-இல் அடிக்கல்!

குடந்தை மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக வாக்குவாதம்

SCROLL FOR NEXT