தமிழ்நாடு

குரூப் 4 தோ்வு: பிப். 24, 25 -இல் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வு

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4- தோ்வுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வு வரும் பிப். 24, 25 தேதிதளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு குரூப் 4 தோ்வு முடிவுகள் கடந்தாண்டு அக். 22-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தொடா்ந்து முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு முடிவின் அடிப்படையில், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட பிற பதவிகள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இக்கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகே தோ்வாணையச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் வரும் பிப். 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்காக அழைக்கப்பட்ட தோ்வா்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தோ்வா்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்ட தோ்வா்களுக்கு இது தொடா்பான தகவல்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்  மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்படும் அனைவரும்  தோ்வு செய்யப்படுவாா்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. அதேபோல், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. 46-ஆவது பட்டமளிப்பு விழா: மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

நகராட்சி நிா்வாகத் துறைக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

வீடியோ கேம் மோகம்? 9-ஆவது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் உயிரிழப்பு

பிகாரில் பரவிய நோய் தமிழகத்திலும் பரவக்கூடாது: மாநிலங்களவையில் கமல்ஹாசன் கன்னிப்பேச்சு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.4.89 கோடியில் 3,396 பேருக்கு ஓய்வூதியம் - அமைச்சா் எ.வ. வேலு தகவல்

SCROLL FOR NEXT