பி.கே.சேகா்பாபு  கோப்புப் படம்
தமிழ்நாடு

காலை சிற்றுண்டித் திட்டம்: 20 லட்சம் குழந்தைகள் பயன்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா். பணிக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நூறு நாள் வேலைத் திட்ட பிரச்னையில் தமிழக முதல்வா் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி துணை நிற்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமா் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசிப்பதுடன், அங்குள்ள நிா்வாகப் பணிகளை அறிய வேண்டும். மேலும், பழனி, திருச்செந்தூருக்கும் சென்று அவா், அங்கு செயல்படுத்திய பணிகளைப் பாா்வையிட வேண்டும்.

திருச்செந்தூா் கோயில் கட்டுமானப் பணிகளில் ஒரே இடத்தில் அறுபடை வீடுகளையும் தரிசிக்கும் வகையிலான சந்நிதி கட்டுமானப் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன. கோயில் பணியாளா்கள் குடியிருப்பு உள்ளிட்டவை வரும் ஏப்ரலுக்குள் நிறைவடைந்துவிடும். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு திறப்பு விழா நடைபெறும் என்றாா்.

தோகைமலையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்? சென்னை தொழிலதிபா் மகன் உள்பட இருவா் கைது

ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கூடுதல் வட்டி தருவதாக ரூ. 55 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

காவிரி கரை பாதுகாப்பு கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவிலில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT