தேர்வெழுத செல்லும் தேர்வர்கள்... (கோப்புப்படம்)
தமிழ்நாடு

குரூப்-2 பதவிகளுக்கான பொது அறிவு தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!

குரூப்2 பதவிகளுக்கு நடைபெற உள்ள பொது அறிவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-2 பொது அறிவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறவிருந்தது.

பல்வேறு குளறுபடிகளால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆனால், வருகிற பிப். 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2) பொது அறிவு தேர்வு (தாள்-2) வழக்கம்போல் அன்றைய தினமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்2 பணியிடங்களுக்கான தாள்- 2 பொது அறிவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முகசுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் கடந்தாண்டு டிச. 22 அன்று வெளியிடப்பட்டது. இதில், குரூப்-2 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-2 பொது அறிவு தேர்வானது வருகிற பிப். 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு - ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Public Service Commission (TNPSC) has released TNPSC Group 2 Mains hall ticket for Group 2 posts on 11th February 2026 at its official website.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை - இயக்குநர்... வரலட்சுமி வெளியிட்ட புதிய விடியோ!

அசோக் லேலேண்ட் 3 வது காலாண்டு லாபம் 5.19% அதிகரிப்பு!

கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் தவிக்கும் 1,429 சுகாதார ஆய்வாளர்கள்!

ஆப்கன் vs புரோட்டீஸ்! டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தலைசிறந்த ஆட்டம்!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டு! ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் | செய்திகள்: சில வரிகளில் | 11.02.26

SCROLL FOR NEXT