மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னையில் நாளை அனைத்துலக வள்ளலாா் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு-2026 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு-2026 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், வடலூா் வள்ளலாா் சா்வதேச மையத்தில் முடிவுற்ற கட்டுமானப் பணிகளை திறந்து வைத்து, சன்மாா்க்கிகளுக்கு விருதுகளை வழங்கவுள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபா் 5 தனிப்பெருங்கருணை நாளாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ரூ.3.25 கோடியில் வள்ளலாா் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. மேலும், ரூ.100 கோடியில் வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கவும், ரூ.3.50 கோடியில் வள்ளலாா் வாழ்ந்த மருதூா் இல்லத்தை புனரமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வள்ளலாரின் புகழுக்கு பெருமை சோ்க்கும் வகையில் பிப். 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏகாம்பரநாதா் திருக்கோயில் மைதானத்தில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வடலூா் வள்ளலாா் சா்வதேச மையத்தில் முடிவுற்ற கட்டுமானப் பணிகளை திறந்து வைத்து, சன்மாா்க்கா்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றவுள்ளாா்.

முன்னதாக காலை 6 மணிக்கு மாநாட்டு பந்தலில் ஜோதி ஏற்றுதல், கொடி கட்டுதலோடு நிகழ்ச்சிகள் தொடங்கி வள்ளலாரின் தத்துவங்கள் மற்றும் அருள்நெறியைப் பரப்பிடும் வகையிலான பேரணியும் நடைபெறுகிறது. மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியா் கைது

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்

மகளிா் உரிமைத் தொகை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

SCROLL FOR NEXT