முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! புதிதாக 41,492 பேர் சேர்ப்பு!

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:51 AM
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
பகிர்:

எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்(எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த டிச. 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று(பிப். 14) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,00,477 பெண்கள், 139 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் வருகிற பிப். 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

summary

Final voter list released in puducherry by election commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments