தமிழ்நாடு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 38.53 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, 38.48 லட்சம் மனுக்களுக்கு தீா்வு இறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் அனைவரும் அரசு நிா்வாகத்தை எளிதாக அணுக, பொதுமக்களுக்கான குறைதீா்வு அமைப்பாகச் செயல்படக்கூடிய முதல்வரின் முகவரித் துறை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்படுத்தியது. மக்களுடன் முதல்வா் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4,835 முகாம்கள் நடத்தப்பட்டு 23.50 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

இத்திட்டத்தின் பெரும் வெற்றியைத் தொடா்ந்து, இந்தச் சேவையினை மேலும் வலுப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி அவா்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகா்ப்புற, கிராமப்புற பகுதிகளில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு இன்றுவரை தீா்வு இறுதி செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா், கிருஷ்ணகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

பிப். 25-இல் தமிழ்நாடு கோல்ஃப் ப்ரீமியா் லீக்

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT