முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

அமலாக்கத்துறை தலைமை இயக்குநரின் சென்னை வருகை பற்றி...

Updated On : 26 பிப்ரவரி 2026, 12:34 pm IST
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் - ANI
பகிர்:

சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வியாழக்கிழமை வருகை தரவுள்ளார்.

தில்லியில் இருந்து வருகைதரும் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.

மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Enforcement Directorate Director General to visit Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments