காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளரிடம் பேசிய அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மேற்கொண்டுள்ள நடைபயணத்தில், முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசும் போது போதைப்பொருட்கள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது, அதனை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நான்கரை ஆண்டுகாலமாக முதல்வராக இருந்து வருகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மத்திய அரசு மீது பழியைப் போடுகிறார். அந்தந்த மாநிலத்தில் முதல்வர்கள்தான் மாநிலத்திற்குள் நடைபெறும் கஞ்சா கடத்தலை போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்க வேண்டும். முதல்வருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தையும் காவல்துறையையும் நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினால், மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். முதல்வர் சாக்குப் போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். தோல்வி அடைந்து விட்டு மத்திய அரசு மீது வழி போடுவது நியாயம் அல்ல.
முதல்வர் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இடைநிலை ஆசிரியர்கள் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் எனப் பலரும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் பரிசு கைது. மக்கள் பசியால் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதையெல்லாம் முதல்வர் கண்டு கொள்ளாமல் மத்திய அரசு மீது பழி சுமத்தி வருகிறார். இதற்கெல்லாம் நாம் இன்னும் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவு அளிப்பார்கள். திமுக தலைமையிலான எந்த ஆட்சியும் வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். பொதுமக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது நம்பிக்கை நம்பிக்கை வைத்து விட்டார்கள். தமிழக காங்கிரஸில் இரு கோஷ்டியாக உள்ளார்கள். காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் கட்சி. தமிழக மக்களுக்கு அவர்கள் எந்தவித நன்மையும் செய்யவில்லை.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நடுரோட்டில் நிற்கும். திருவனந்தபுரம் தேர்தல் என்பது 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாம். இவ்வாறு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.