ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொடுத்தும் தண்ணீர் 
தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இரு மாநில காவிரி கரையோரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்தது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் அண்மை காலங்களாக குறைக்கப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2,000 கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. திடீர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hogenakkal cauvery water inflow increase

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

சென்னை புத்தகக் காட்சி: அனுமதி இலவசம் என அறிவிப்பு!

பூலோக நரகத்தில் வெனிசுவேலா அதிபர் மதுரோ.. அவ்வளவு கொடூரமானதா ப்ரூக்ளின் சிறை?

அறிவியல் ஆயிரம்: உலக பிரெய்லி நாளும் லூயிஸ் பிரெய்லியும்!

சுறா உள்பட 1,000 திரைப்படங்களில் நடித்த அப்பச்சன் காலமானார்!

SCROLL FOR NEXT