பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்  
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் மொத்தம் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ள நிலையில், சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பணிகளைத் தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பரசன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூ. 3,000-யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள்.

பொங்கல் பண்டிக்கைக்கு முன்னதாக அனைத்து மக்களுக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிடப்பட்ட நேரத்தில் சென்று மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pongal gift package: Chief Minister Stalin launched

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள்- இபிஎஸ்

டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!

ஹர்மன்பிரீத் கௌர், நாட் ஷிவர் பிரண்ட் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஆக்ரா: 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

தங்கக் கவச முறைகேடு: கைதான சபரிமலை கோயில் தந்திரி மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT