முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

Updated On : 8 ஜனவரி 2026, 6:56 am IST
ஆவின் பால் - கோப்புப்படம்
பகிர்:

ஆவின் பால் பாக்கெட்டுகள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக, கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வந்தது. இதற்கு விளக்கம் அளித்து ஆவின் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆவின் நிறுவனம் மூலம் சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என 5 வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 31 லட்சம் லிட்டா் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதில் சென்னையில் மட்டும்

Advertisement

Advertisement

15 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மாதம் ஒன்றுக்கு சுமாா் ரூ.30 கோடியில் பால் உப பொருள்கள், விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஆவின் பால் விலை ஏற்றம் என்ற தகவல் தவறானது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விலையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments