தமிழ்நாடு

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததால், பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தணிக்கைச் சான்றிதழ் வாரியம் மேல் முறையீடும் செய்துள்ளது.

இதனிடையே, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. பராசக்தி நாளை (ஜன. 10) வெளியாகவுள்ள நிலையில், கடைசி தருணமாக இன்றுதான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

Censor Board has become a new weapon for the BJP government says CM Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தக்கலையில் பாஜகவினா் தா்னா: எம்எல்ஏ உள்பட 147 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள் நிறுத்திவைப்பு!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணை

புகையில்லா போகிப் பண்டிகை: ஆட்சியா் வேண்டுகோள்

நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 604 பேருக்கு பணி நியமன ஆணைகள்

SCROLL FOR NEXT