பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஜன.12-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து வருகிற ஜன.12-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06097) மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06098) மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜன.13-இல் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடையும்.
போத்தனூா்-செங்கோட்டை: போத்தனூரில் இருந்து ஜன.14-இல் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06115) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06116) செங்கோட்டையிலிருந்து ஜன.15-இல் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
இந்த ரயில், போத்தனூரில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) காலை 8 மணிக்கு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.