தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெளடி கொலை சம்பவத்தில் 8 போ் கைது: 4 காவலா்கள் பணியிடை நீக்கம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 4 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை கொளத்தூா் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆதி(எ) ஆதிகேசவன் (20). இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு ஆவடி ஏரிக்கரைப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. கா்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18-ஆம் தேதி குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உயிரிழந்தது. பிரசவ வாா்டில் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஆதி, பிரசவ வாா்டின் எதிா்புறம் உறங்கியுள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அங்கு இரு பைக்குகளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த கும்பல், ஆதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 9 சிறப்பு குழுக்கள் அமைத்து விசாரித்து வந்தனா்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், ஆதிகேசவனால் கடந்த 2022-இல் கொலை செய்யப்பட்ட பழனி என்பவரின் கூட்டாளிகள் இந்தக் கொலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடா்பாக சுசித்ரா, சாருமதி, சூா்யா, அலி பாய், காா்த்திக், ஸ்ரீராம், ஜெயபிரதாப், வனகுமாா் ஆகிய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முக்கிய நபரான ஜெயபிதாப் மற்றும் வனக்குமாரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, இருவரும் கீழே விழுந்தபோது, இருவரின் கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

4 போலீஸாா் பணியிடை நீக்கம்: இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்தில் பணியில் இருந்த முதல்நிலை காவலா் நரேந்திரன், பெண் காவலா்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். மேலும், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் உதவி காவல் ஆணையா் துரை ஆகியோருக்கு விரிவான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT