பலியான சக்திவேல் DPS
தமிழ்நாடு

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு! செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளியில் 2 பேர் பலி

அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளியில் 2 பேர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி ஊர்களில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இருவர் பலியாகினர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி கொண்டையம்பள்ளி, உலிபுரம், நாகம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி சிறிய அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கொண்டையம்பள்ளியில் நடந்த ஜல்லிக்கட்டில் அதே ஊரில் வடக்கு தெரு பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி ஜெகதீஷ் மனைவி வினிதா(31 )என்பவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க தனது கை குழந்தையுடன் சென்றபோது மாடு முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் செந்தாரப்பட்டி தேர்முட்டி தெருவில் வசிக்கும் சின்னத்தம்பி மகன் சக்திவேல் (26) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்க்கச் சென்ற போது மாடு முட்டி உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Two people died in Sentharapatti and Kondayampally in unsanctioned Jallikattu competitions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக அரசின் திட்டங்களைக் காப்பி அடித்த எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

நீலகிரி: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளிகள் மூவர் பலி

ஆண்களுக்கு இலவச பேருந்து அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள்! | செய்திகள்: சில வரிகளில் | 17.01.26

நிறைவடைந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளைப் பிடித்து கார்த்தி முதலிடம்

உகாண்டா அதிபராக 7-வது முறையாக முசேவேனி வெற்றி!

SCROLL FOR NEXT