பிரதமர் நரேந்திர மோடி. கோப்புப் படம்
தமிழ்நாடு

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் வருகையையொட்டி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் வருகையையொட்டி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஜன. 23) தமிழகம் வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"23.01.2026 அன்று பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் சென்னை - திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி - சென்னை மார்க்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை - திண்டிவனம் மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது

சென்னை - திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது

திருப்பெரும்புதூர். ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் விழுப்புரம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

1) திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர். திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு - செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.

2) சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவிமங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

3) கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி. காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

4) திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

சென்னையிலிருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்

அல்லது வண்டலூர் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அல்லது 1) கூடுவாஞ்சேரி - மறைமலைநகர் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு, திருக்கழுக்குன்றம் வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம், திண்டிவனம் வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

2) சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

விழுப்புரத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.

அல்லது திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்.

அல்லது திண்டிவனம் -கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலார் சந்திப்பு) - கீழம்பி புற வழிச்சாலை ஜிடபிள்யூடி சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லாம்.

PM Modi visits tamilnadu: Traffic changes on Chennai-Trichy National Highway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழை!

ஜன. 25 மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

தென்றல் தொடர் பாணியில் புதிய சீரியல் கனா கண்டேனடி!

அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு! ஏ.ஆர். ரஹ்மானுக்கு அண்ணாமலை ஆதரவு!

விரைவில் டி20 உலகக் கோப்பை; குல்தீப் யாதவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த நகைச்சுவையான அறிவுரை!

SCROLL FOR NEXT