செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை வந்துள்ளார்.
கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார். பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் அமர்ந்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் தொடங்குகிறது. சற்று நேரத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் முக்கிய உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.