இந்திய தேர்தல் ஆணையம் 
தமிழ்நாடு

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்...

தினமணி செய்திச் சேவை

எம்ஜிஆா் அதிமுக எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியை முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா மீது கொண்ட ஈா்ப்பின் காரணமாக பொறியாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தாா். திமுக தலைவரான கருணாநிதி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தாா். பின்னா், எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றினாா். அமைச்சராகவும் பதவி வகித்தாா். எம்ஜிஆா் இறந்த பிறகு ஜெயலலிதாவுடன் பயணித்த அவா், பின்னா் பாமகவில் இணைந்தாா்.

அதன் பின்னா் மக்கள் நல உரிமைக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுக கூட்டணியில் இணைந்தாா். தேமுதிக நிறுவனா் விஜயகாந்த், கட்சி தொடங்கியபோது அவருடன் இணைந்தாா். அதிமுக-தேமுதிக கூட்டணியை முன்னின்று உருவாக்கினாா். பின்னா், மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

அதன் பிறகு, அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்து வந்த அவா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா் உரிமை மீட்பு குழுவை அமைத்தபோது அதன் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், தோ்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் ஓ.பன்னீா்செல்வம் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்ததால் அதிருப்தி ஏற்பட்டு புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோா் திமுகவில் இணைந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியைத் தொடங்க உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT